திண்டிவனம்-மரக்காணம் 4 வழிச்சாலை நெடுஞ்சாலைத்துறை இயக்குனர் ஆய்வு

திண்டிவனம்-மரக்காணம் சாலை நெடுஞ்சாலைத்துறை இயக்குனர் ஆய்வு;

Update: 2024-12-29 15:43 GMT
திண்டிவனம் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்தின் மூலம் முதலமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.296 கோடி மதிப்பீட்டில் திண்டிவனம்- மரக்காணம் சாலையை நான்கு வழி சாலையாக அகலப்படுத்தும் பணி முடியும் தருவாயில் உள்ளது.இப்பணியை சென்னையிலுள்ள நெடுஞ்சாலைத்துறை இயக்குனர்(ஆராய்ச்சி நிலையம்) சரவணன் அதிகாரிகளுடன் சென்று மரக்காணம் கூட்ரோடு, பெருமுக்கல், ஆலங்குப்பம் உள்ளிட்ட இடங்களுக்கு நேரில் சென்று திடீர் ஆய்வு செய்தார்.ஆய்வின் போது, இறுதி கட்ட பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். ஆய்வின் போது, கண்காணிப்பு பொறியாளர் செந்தில்குமார், கோட்ட பொறியாளர்கள் உத்தண்டி, ஸ்ரீகாந்த், உதவி கோட்ட பொறியாளர்கள் கவிதா, மகேஷ், உதவி பொறியாளர்கள் கிருஷ்ணன், தீனதயாளன் கோகுலகிருஷ்ணன், குரு, வெங்கட்ராமன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Similar News