ஜெயங்கொண்டம் -செந்துறை 4 வழி தடப்பணியை தொடங்கி வைத்த போக்குவரத்து துறை அமைச்சர்

ஜெயங்கொண்டம் - செந்துறை நான்கு வழி பணியை போக்குவரத்து துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.;

Update: 2025-02-24 10:59 GMT
அரியலூர், பிப்.24- அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே வாரியங்காவல் ஊராட்சியில் 2450 லட்சம் மதிப்பில் 33/0 கிலோ மீட்டர் முதல் 37/0 வரை செந்துறை - ஜெயங்கொண்டம் (மாநில நெடுஞ்சாலை) சாலையை இரு வழி தடத்திலிருந்து நான்கு வழி தடமாக அகலப்படுத்தும் பணியை தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சா சி .சிவசங்கர் தொடங்கி வைத்தார். இதில் ஜெயங்கொண்டம் எம் எல் ஏ க.சொ.க கண்ணன், ஒன்றிய செயலாளர் கலியபெருமாள், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் லூயி கதிரவன், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் டி.எம் டி அறிவழகன் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர்  தர்மதுரை, மற்றும் மாவட்ட ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.அதனை தொடர்ந்து இலையூர் வாரியங்காவல் பகுதியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் மாற்றுக் கட்சியிலிருந்து வந்து திமுகவில் போக்குவரத்து துறை அமைச்சர் முன்னிலையில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

Similar News