ராமநாதபுரம் சட்ட விரோதமாக மது விற்ற 4 பேர் கைது
கடலாடி அருகே பெட்டிக் கடைகளில் சட்டவிரோதமாக மது பட்டிகள் விற்பனை செய்த பெண்கள் உட்பட 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.;
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அடுத்துள்ள ஆப்பனூர் கிராமத்தில் பெட்டிக்கடைகளில் மது பட்டிகள் விற்கப்படுவதாக கடலாடி போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் முதுகுளத்தூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் சண்முகம், கடலாடி காவல் ஆய்வாளர் இளங்கோவன், உதவி ஆய்வாளர் முகிலரசன் தலைமையிலான போலீஸார் ஆப்பனூர் கிராமத்தில் உள்ள பெட்டிக்கடைகளில் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் 168 மது புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக மது கடைகளிலில் இருந்து மொத்தமாக வாங்கி வந்து, பெட்டிக்கடைகளுக்கு மது புட்டிகளை விற்பனை செய்து வந்த ஆப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த சொக்கலிங்க மகன் ராமமூர்த்தி என்ற குட்டை கனி(50), மற்றும் பெட்டிக்கடை உரிமையாளர்கள் பார்வதி, சண்முகவள்ளி, உமயலட்சுமி உள்ளிட்ட 4 பேர் மீதும் வழக்கு பதிந்து, மது பட்டிகளை பறிமுதல் செய்து, கைது செய்தனர்.