சேலம் அம்மாபேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியமூர்த்தி தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சின்னவரகம்பாடி பகுதியில் மது விற்ற மாசிநாயக்கன்பட்டியை சேர்ந்த நாச்சியாயி (வயது70), சித்தாயி (70) ஆகிய 2 மூதாட்டிகளை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 28 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். அதே போன்று மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் பழனி தலைமையில் போலீசார் அழகாபுரம், கொண்டலாம்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதிகளில் மது விற்ற மோகன் (41), கல்யாணி (55) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.