மளிகை கடை ஊழியரை மிரட்டி பணம் பறித்த 4 பேர் கைது
மளிகை கடை ஊழியரை மிரட்டி பணம் பறித்த 4 பேர் கைது;
மளிகை கடை ஊழியரை மிரட்டி பணம் பறித்த 4 பேர் கைது சத்தியமங்கலம் பஸ் ஸ்டாண்டில் மளிகை கடை ஊழியரை மிரட்டி பணம் பறித்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். சத்தி அத்தாணி ரோட்டில் உள்ள மளிகை கடையில் வேலை செய்து வருபவர் புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரைச் சேர்ந்த பக்ரூதீன் (39). இவர் ரம்ஜான் பண்டிகைக்கு தனது சொந்த ஊருக்கு செல்வதற்காக சம்பளத் தொகை ரூ.20 ஆயிரத்தை வாங்கிக் கொண்டு பஸ் ஸ்டாண்ட் வந்துள்ளார். அங்கு பாத்ரூம் செல்வதற்காக கழிவறைக்குள் சென்றபோது, அவரைப் பின்தொடர்ந்து சென்ற 4 பேர், அவரிடம் இருந்த ரூ.20 ஆயிரத்தை பறித்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் தப்பிச்சென்றனர். இதுகுறித்து பக்ருதீன் சத்தி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் சத்தி பஸ் ஸ்டாண்டில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இதையடுத்து இச்சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.19 ஆயிரத்து 500 மற்றும் 3 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர்கள் சத்தி, மேற்கு வீதியைச் சேர்ந்த சாதிக் (21), அதே பகுதியைச் சேர்ந்த பிரபு (25), சத்தி, வடக்குப்பேட்டையைச் சேர்ந்த ஸ்ரீநாத் (22), சத்தி, கரட்டூரைச் சேர்ந்த மணிகண்டன் (29) என தெரிய வந்தது.