வேலூரில் 4 பி.டி.ஓ-க்கள் பணியிடமாற்றம்!
வேலூர் மாவட்டத்தில் 4 பி.டி.ஓ-களை பணியிட மாற்றம் செய்து ஆட்சியர் சுப்புலட்சுமி உத்தரவிட்டார்.;
வேலூர் மாவட்டத்தில் 4 பி.டி.ஓ-களை பணியிட மாற்றம் செய்து ஆட்சியர் சுப்புலட்சுமி உத்தரவிட்டார். குடியாத்தம் துணை BDO சசீந்திரன் வேலூர் உதவி இயக்குனர் அலுவலக BDO-வாகவும், அங்கு பணியாற்றிய சசிகலா ஆட்சியர் அலுவலக மேலாளராகவும், மாவட்ட ஊரக வளர்ச்சி BDO ராஜன் பாபு கே.வி.குப்பம் BDO-வாகவும், அங்கு பணியாற்றிய சதிஷ்குமார் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை BDO-வாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.