ஊத்தங்கரையில் ரூ. 4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஒ.வுக்கு காப்பு.
ஊத்தங்கரையில் ரூ. 4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஒ.வுக்கு காப்பு.;
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்துள்ள கதிரம்பட்டியை சோ்ந்தவா் வடிவேல். இவருடைய மனைவி சசிகலா பெயரில் புதிதாக வழங்கப்பட்ட பட்டா எண் 175-இல் திருத்தம் செய்யக் கோரி, இணையதளத்தில் விண்ணப்பித்திருந்தனர். இதற்கு விஏஒ அகத்தூயவன் 4 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளாா். இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையில் வடிவேல் புகாா் அளித்தாா்.போலீசார் அறிவுரைப்படி, ரசாயனம் தடவிய ரூ. 4 ஆயிரத்தை வடிவேல் விஏஒ அகத்தூயவனிடம் கொடுத்த போது அங்கு மறைந்திருந்த தருமபுரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை காவல் துணை கண்காணிப்பாளா் (பொ) நாகராஜன் மற்றும் போலீசார் லஞ்ச பணத்தோடு பிடித்து கைது செய்தனர்.