திருமங்கலத்தில் ரூ. 4 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை

மதுரை திருமங்கலத்தில் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு ரூ. 4 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையானதாக தகவல் வெளியாகி உள்ளது.;

Update: 2025-05-31 02:46 GMT
மாவட்டம் திருமங்கலத்தில் வாரச்சந்தையில் நேற்று பக்ரீத் பண்டிகைக்கு ஒரு வாரம் உள்ள நிலையில் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து 3000க்கும் மேற்பட்ட சிறு ஆடுகள் முதல் பெரிய அளவிலான கிடா ஆடுகள் வரை விற்பனைக்கு வந்திருந்தன.. சிறு ஆடுகள் ரூ. 15 ஆயிரத்திற்கும் மிகாமலும் பெரிய ஆடுகள் ரூ. 40 ஆயிரத்திற்கு மேலும் விற்பனைக்கு பேசப்பட்டது. நேற்று மட்டுமே ரூ.4 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையானதாக தெரிகிறது. ஆடுகளை வாங்க பல்வேறு பகுதிகளிலிருந்தும் வேன்களை கொண்டு வந்து ஆடுகளை ஏற்றிக் கொண்டு சென்றனர்.

Similar News