வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலையில் 4 அடி அகலத்திற்கு திடீரென ஏற்பட்ட பள்ளம்! விபத்து ஏற்படும் முன் சரி செய்ய கோரிக்கை.
வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலையில் 4 அடி அகலத்திற்கு திடீரென ஏற்பட்ட பள்ளம்! விபத்து ஏற்படும் முன் சரி செய்ய கோரிக்கை.;
வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலையில் 4 அடி அகலத்திற்கு திடீரென ஏற்பட்ட பள்ளம்! விபத்து ஏற்படும் முன் சரி செய்ய கோரிக்கை. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி புதிய கூடுதல் பேருந்து நிலையம் அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கிளையாற்றில் கலக்கக்கூடிய நீர்வழி பாதையாக உள்ள நிலையில் அதற்காக பாலம் உள்ளது அதன் நடுவே 4 அடி அகலத்திற்கு திடீரென ஆழமான பள்ளம் ஏற்பட்டுள்ளது. இவ்வழியாக ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம்,மற்றும் கனரக வாகனம் அதிக வேகமாக செல்லக்கூடிய வாகனங்கள் அந்தப் பள்ளத்தில் கடந்து செல்கிறது. இதனால் விபத்து ஏற்படும் நிலை உள்ளது எனவே நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் இது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் விபத்து ஏற்படும் முன் இப்பள்ளத்தை சரி செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.