ராசிபுரம் அருகே விநாயகர் சிலை எடுக்கச் சென்ற மினி ஆட்டோ சாலையில் கவிழ்ந்து விபத்து. 4 இளைஞர்கள் படுகாயம் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை..
ராசிபுரம் அருகே விநாயகர் சிலை எடுக்கச் சென்ற மினி ஆட்டோ சாலையில் கவிழ்ந்து விபத்து. 4 இளைஞர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி...;
தமிழகம் முழுவதும் நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் கோவில் மற்றும் சாலைகளில் விநாயகர் சிலை வைத்து சாமி தரிசனம் செய்வது வழக்கம் அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி பகுதியை சேர்ந்த 8 இளைஞர்கள் சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே விநாயகர் சிலை எடுப்பதற்காக சுமார் இன்று அதிகாலை 2.30 மணி அளவில் தஞ்சாவூர் பகுதியில் இருந்து மினி ஆட்டோவில் புறப்பட்டு சேலத்தை நோக்கி சென்று கொண்டிருந்துள்ளனர். அப்போது நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஆண்டகளூர்கேட் அருகே ஓட்டுனர் ஹரி(24)என்பவர் ஓட்டிச் சென்ற நிலையில் முன்னால் சென்ற லாரி மீது ஆட்டோ மோதியதாக கூறப்படுகிறது.ஆட்டோ மோதியை வேகத்தில் சாலையை நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஆட்டோவில் பயணம் மேற்கொண்ட 8 இளைஞர்களின் 4 இளைஞர்கள் பலத்த படுகாயங்களுடன் மீட்கப்பட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர், மேலும் விபத்து தொடர்பாக ராசிபுரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்...