சேலத்தில் ஆட்டோவில் இருந்த ரூ.4 ஆயிரம் திருட்டு

கிச்சிபாளையம் போலீசார் விசாரணை;

Update: 2025-08-31 04:21 GMT
சேலம் அம்மாப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஷேக்தாவூத், ஆட்டோ டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு கிச்சிப்பாளையம் நாராயண நகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தார். பின்னர் ஆட்டோவை அந்த பகுதியில் நிறுத்திவிட்டு உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு மீண்டும் வந்தார். அப்போது ஆட்டோவில் இருந்த ரூ.4 ஆயிரம், ஏ.டி.எம். கார்டு உள்ளிட்டவை திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து கிச்சிப்பாளையம் போலீஸ் நிலையத்தில் ஷேக்தாவூத் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News