ஐந்து அருவியில் மருத்துவ மாணவர் நந்தகுமார் உயிரிழப்பு – 4 நாட்கள் தேடலுக்குப் பின் உடல் மீட்பு !

தடுப்பு வேலி இல்லாமல் தொடரும் உயிரிழப்புகள் – மக்கள் ஆவேசம்.;

Update: 2025-10-22 01:33 GMT
ஐந்து அருவியில் செல்ஃபி எடுக்க முயன்ற போது தவறி விழுந்த மருத்துவப் படிப்பு மாணவர் நந்தகுமார் உடல், நான்கு நாட்கள் தேடலுக்குப் பின் நேற்று மீட்கப்பட்டது. இதுவரை அந்த அருவியில் விழுந்து உயிரிழந்தவர்கள் பெரும்பாலும் படித்தவர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது. உள்ளூர் பகுதியைச் சேர்ந்த 6 நபர்களும், வெளியூரைச் சேர்ந்த 6 நபர்களும் இதுவரை உயிரிழந்துள்ளனர். ஆபத்தான சுழல் இருப்பது தெரிந்தும், பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படாததால் விபத்துகள் தொடர்கின்றன. ஒரு வருடத்திற்கு முன்பே தடுப்பு வேலி அமைப்பதாக கூறியிருந்தும், அது இன்னும் நடைமுறைக்கு வராததால் மீண்டும் ஓர் உயிர் பலியாகியுள்ளது. இனிமேல் இதுபோன்ற விபத்துகள் நடைபெறாதவாறு, உடனடியாக தடுப்பு வேலி அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Similar News