திருமணமான 4 மாதத்தில் வரதட்சனை கொடுமையால் பெண் தற்கொலை: கணவர் உள்பட4 பேருக்கு ஆயுள் தண்டனை

திருமணமான 4 மாதத்தில் வரதட்சனை கொடுமையால் பெண் தற்கொலை: கணவர் உள்பட4 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.;

Update: 2025-03-21 03:10 GMT
திருமணமான 4 மாதத்தில் வரதட்சனை கொடுமையால் பெண் தற்கொலை: கணவர் உள்பட4 பேருக்கு ஆயுள் தண்டனை
  • whatsapp icon
அரியலூர், மார்ச் 21- அரியலூரில் திருமணமான 4 மாதத்தில் வரதட்சனை கொடுமையால் பெண் தற்கொலை வழக்கில் கணவர் உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து அரியலூர் மகளிர் நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, கண்டனூர் சாலையைச் சேர்ந்தவர் செல்வராஜன் மகன் செந்தில்குமாரவேலு(32). இவர் திருமண இணையதளம் மூலம் பெண் பார்த்துள்ளார். அப்போது அரியலூர் அண்ணாநகர், முதல் தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் மகள் கனகவள்ளியை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ள இவர், கடந்த 5.2.2018 கனகவள்ளியை திருமணம் செய்துள்ளார். திருமணத்தின் போது, 25 பவுன் நகைகள், ரூ.2.50 லட்சம் மதிப்பில் வீட்டு பொருள்கள், திருமண செலவுக்கு ரூ.2.50 ஆகியவற்றை கனகவள்ளி தந்தை ராஜேந்திரன் வரதட்சனையாக கொடுத்துள்ளார். ஆயினும், மேலும் 10 பவுன் நகை, இருசக்கர வாகனம் வாங்க பணம் கேட்டுள்ளனர் செந்தில்குமாவேலு குடும்பத்தினர். அதற்கு ராஜேந்திரன் பிறகு தருவதாக கூறியுள்ளார்.இந்நிலையில், சென்னையில் செந்தில்குமாரவேலு மற்றும் கனகவள்ளி வசித்து வந்த போது, நகை, பணம் கேட்டு செந்தில்குமாரவேலு, அவரது தாய் கலாவதி(61), தம்பி ஹரிகிருஷ்ணவேலு(30) மற்றும் அவரது உறவினர் முருகன்(51) ஆகியோர் கனகவள்ளியை அடித்து துன்புறுத்தியுள்ளனர். இதையறிந்து ராஜேந்திரன், தனது மகளை பார்க்க சென்னை சென்றபோது, மேற்கண்ட நபர்கள் ராஜேந்திரனை அவமானப்படுத்தி அனுப்பியுள்ளனர்.இதனால் மன உடைந்து போன ராஜேந்திரன் கடந்த 12.5.2018 அன்று மாரடைப்பால் உயிரிழந்தார். இதையடுத்து நகை, பணம் வாங்கி வரச் சொல்லி கனகவள்ளியை அரியலூருக்கு அனுப்பியுள்ளனர். கடந்த 13.6.2018 அன்று தனது தந்தை மற்றும் தனது இறப்புக்கும் செந்தில்குமாரவேலு, கலாவதி உள்பட 4 பேர் தான் காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு, கனகவள்ளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கனகவள்ளி தாய் ஆண்டாள் அளித்த புகாரின் பேரில் மேற்கண்ட 4 பேரையும் அரியலூர் காவல் துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கு அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்து வந்த நீதிபதி டி.செல்வம், குற்றவாளிகளான செந்தில்குமாரவேலு, அவரது தாய் கலாவதி, தம்பி ஹரிகிருஷ்ணவேலு மற்றும் அவரது உறவினர் முருகன் ஆகிய 4 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து வியாழக்கிழமை தீர்ப்பளித்தார். இதையடுத்து அவர்கள் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் அரசு வழக்குரை ம.ராஜா ஆஜராகினார்.

Similar News