பெருமாள்பட்டி காலனி-4- பிளாட் வாங்கித் தருவதாக கூறி ரூ.6-லட்சம் வாங்கி மோசடி செய்த நபர் கைது.

பெருமாள்பட்டி காலனி-4- பிளாட் வாங்கித் தருவதாக கூறி ரூ.6-லட்சம் வாங்கி மோசடி செய்த நபர் கைது.

Update: 2025-01-13 01:52 GMT
பெருமாள்பட்டி காலனி-4- பிளாட் வாங்கித் தருவதாக கூறி ரூ.6-லட்சம் வாங்கி மோசடி செய்த நபர் கைது. கரூர் மாவட்டம், தாந்தோணிமலை பஜார் பகுதியில் வசித்து வருபவர் கோவிந்தசாமி மனைவி சித்ராதேவி. கூலி வேலை செய்து வருகிறார். இவரிடம் கரூர் மாவட்டம்,புலியூர் அருகே உள்ள பி. வெள்ளாளப்பட்டியை சேர்ந்த ரவிச்சந்திரன் வயது 50 என்பவர் கடந்த 6- மாதத்திற்கு முன்பாக ரூபாய் 6- லட்சம் பெற்றுக் கொண்டு 4- பிளாட் வாங்கி தருவதாக கூறி மோசடி செய்யும் நோக்கில் பணத்தை பெற்றுள்ளார். இது தொடர்பாக கடந்த ஆண்டு ஜூலை 23ஆம் தேதி ரவிச்சந்திரனிடம் தனது பணத்தை கொடுக்குமாறு சித்ராதேவி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ரவிச்சந்திரன், சித்ரா தேவியை தகாத வார்த்தை பேசி இரும்பு ராடை காட்டி மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக அளித்த புகாரின் பேரில், விசாரணை மேற்கொண்டு வந்த காவல் துறையினர், ஏற்கனவே வேறொரு வழக்கில் ரவிச்சந்திரனை கைது செய்து சிறையில் அடைத்து உள்ளதால், தற்போது மீண்டும் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வெள்ளியணை காவல்துறையினர்.

Similar News