பாஜக சார்பில் கூட்ட நெரிசலில் இறந்த 40 பொதுமக்களுக்கு மலர் தூவி மவுன அஞ்சலி
திண்டுக்கல் எம்ஜிஆர் சிலை அருகே பாஜக சார்பில் கூட்ட நெரிசலில் இறந்த 40 பொதுமக்களுக்கு மலர் தூவி மவுன அஞ்சலி;
திண்டுக்கல் பேருந்து நிலையம் எம்ஜிஆர் சிலை அருகே திண்டுக்கல் பாஜக கிழக்கு மாவட்ட இளைஞரணி சார்பாக பாஜக கிழக்கு மாவட்ட தலைவர் முத்துராமலிங்கம் தலைமையில் மாவட்ட இளைஞரணி தலைவர் அன்பு ஹரிஹரன் முன்னிலையில் பாஜகவினர் கரூரில் TVK சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கூட்ட நெரிசலில் இறந்த 40 பொதுமக்களுக்கு மலர் தூவி மவுன அஞ்சலி செலுத்தினர்.