மண்டலாபிஷேக பூஜையில் 40 கட்டளைதாரர்கள் ஒரே நாளில் சிறப்பு வழிபாடு
குமாரபாளையம் 24 மனை மாரியம்மன் கோவில் மண்டலாபிஷேக பூஜையில் 40 கட்டளைதாரர்கள் ஒரே நாளில் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
குமாரபாளையம் 24 மனை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா சில நாட்கள்முன்பு நடந்தது. இதையடுத்து மண்டல பூஜைகள் நடந்து வருகிறது. பெண் பக்தர்கள் குழு சார்பில் திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் பெண்கள் பெருமளவில் பங்கேற்று, அம்மன் சரணம் சொல்லியவாறு வழிபாடு நடத்தினர். நேற்று மண்டலாபிஷேக பூஜையின் ஒரு கட்டமாக 40 கட்டளைதாரர்கள் ஒரே நாளில் சிறப்பு வழிபாடு நடத்தினர். அம்மனுக்கு காவிரியில் இருந்து தீர்த்தக்குட ஊர்வலமாக எடுத்து வந்து சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடத்தப்பட்டது. கட்டளைதாரர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பொன்னாடை அணிவித்து, கோவில் பிரசாதம் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. அக். 10ல் 108 சங்கு பூஜை, அக். 6ல் திருக்கல்யாண உற்சவம், கோ பூஜை, மாங்கல்ய பூஜை உள்ளிட்ட 10 விதமான பூஜைகள், 108 ஜோடிகளுக்கு இலவச திருமணம் ஆகியன நடக்கவுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.