திருப்பூரில் பார்சல் சர்வீஸ் மூலம் பெங்களூரிலிருந்து கடத்தி வரப்பட்ட 400 கிலோ குட்கா பறிமுதல்!

திருப்பூரில் பார்சல் சர்வீஸ் மூலம் பெங்களூரிலிருந்து கடத்தி வரப்பட்ட 400 கிலோ குட்காவை பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-08-17 16:01 GMT
பார்சல் சர்வீஸ் மூலம் பெங்களூரில் இருந்து கடத்திவரப்பட்ட 400 கிலோ குட்கா பறிமுதல் மூன்று பேர் கைது. திருப்பூர் ஊத்துக்குளி சாலை மன்னரைப் பகுதியில் அவ்வப்பொழுது பார்சல் ஏற்றி வரும் லாரிகள் மூட்டைகளை இறக்குவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் ஊத்துக்குளி சாலை மன்னரை பகுதியில் போலீசார் இன்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது பெங்களூரில் இருந்து பார்சல் மூட்டைகளை ஏற்றி வந்த லாரியில் இருந்து ஆறு மூட்டைகள் வழியில் இறக்கப்பட்டு மாற்று ஆட்டோவில் ஏற்றப்பட்டது தெரியவந்தது உடனடியாக லாரி மற்றும் ஆட்டோவை மடக்கி பிடித்த போலீசார் பண்டல்களை பிரித்து சோதனை செய்தபோது அதில் 400 கிலோ குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து லாரி டிரைவர் அழகுராஜா என்பவரிடம் விசாரித்த போது திருப்பூர் மாவட்டம் கணபதிபாளையம் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் மளிகை கடை வைத்து நடத்தி வருவதாகவும் இவர் பெங்களூரில் இருந்து விலை குறைவாக குட்கா பொருட்களை வாங்கி அங்கிருந்து திருப்பூருக்கு கடத்தி வருவதும் பார்சல் நிறுவனத்திற்கு தெரியாமல் பாதி வழியில் பண்டல்களை ஏற்றிக்கொண்டு வந்து திருப்பூர் பார்சல் அலுவலகத்திற்கு செல்லும் முன்பாக  மன்னரைப் பகுதியில் மூட்டைகளை இறக்கி கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து லாரி டிரைவர் அழகுராஜா மற்றும் ஆட்டோ ஓட்டுனர் சதீஷ் மற்றும் முருகன் என மூன்று பேரை கைது செய்த திருப்பூர் வடக்கு போலீசார் 400 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News