கரூர் மாவட்ட அரசியலில் பிராடு, 420 யார்? விளக்கம் அளித்த முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர்.
கரூர் மாவட்ட அரசியலில் பிராடு, 420 யார்? விளக்கம் அளித்த முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர்.;
கரூர் மாவட்ட அரசியலில் பிராடு, 420 யார்? விளக்கம் அளித்த முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர். கரூர் மாவட்டத்தில் எதிரும் புதிருமாக அரசியல் செய்து வரும் முன்னாள் அமைச்சர்கள் எம் ஆர் விஜயபாஸ்கர் மற்றும் செந்தில் பாலாஜி இடையே அவ்வப்போது உரசல் முட்டல் மோதல் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இன்று கரூர் மாவட்ட அதிமுக கட்சி அலுவலகத்தில் அதிமுக கரூர் மாவட்ட செயலாளரும் முன்னாள் தமிழக போக்குவரத்து துறை அமைச்சருமான MR விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். கடந்த சில நாட்களாக கரூரில் கோவில் நிலம் தொடர்பாக நீதிமன்ற உத்தரவுபடி கோவில் நிலத்தை ஜப்தி செய்யும் நடவடிக்கை நடைபெற்று வருகிறது. இந்த நிலம் தொடர்பாக நில உடமையாளர்கள் இது கோவில் நிலம் அல்ல. கோவில் நிர்வாகத்தால் கோவிலுக்கு ஊழியம் செய்ததற்காக வழங்கப்பட்ட இனம் நிலங்கள் என விளக்கம் அளித்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு செந்தில் பாலாஜி எம் ஆர் விஜயபாஸ்கரை மறைமுகமாக ஃபிராடு,420 என தெரிவித்தார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக இந்த செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது செந்தில் பாலாஜி கடந்த காலங்களில் கரூர் மாவட்டத்தில் அரசியல் செய்வதற்காக அளித்த வாக்குறுதிகளை பட்டியலிட்டு விளக்கினார். அதில் ஆள் கடத்தல் செய்து சொத்தை அபகரிப்பது,போலி மதுபானம் தயார் செய்து விற்பனை செய்வது,ஸ்பிரிட் கடத்தல்,அரசு வேலை வாங்கி தருவதாக பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றுவது, வாங்கிய பணத்தை கொடுக்காமல் ஏமாற்றுவது,அரவக்குறிச்சி தேர்தலின் போது 25 ஆயிரம் பேருக்கு இடம் கொடுத்து வீடும் சொந்த செலவில் கட்டித் தருவேன் என பொய்யான வாக்குறுதி அளித்தது,11 மணிக்கு மாட்டு வண்டியில் மணல் அள்ளலாம் என போலி வாக்குறுதி கொடுப்பது போன்ற செயல்களை சுட்டிக்காட்டி இந்த செயல்களை செய்பவர்களுக்குத்தான் "420" என பெயரை குறிப்பிடாமல் செந்தில்பாலாஜிக்கு பதிலளித்து எம்.ஆர்.விஜயபாஸ்கர் விளக்கம் அளித்தார். மேலும் தேர்தலில் வாக்கு செலுத்தும் அன்று வெள்ளி கொலுசு என்று கூறி கல்லு வெள்ளி கொலுசை கொடுத்து பெண்களை ஏமாற்றியது ,கோவில் இனாம் நிலங்களுக்கு 100 நாள்ல பட்டா வாங்கித்தருவேன் என வாக்குறுதி கொடுத்து ஏமாத்துவதுதான் "420" என விளக்கம் அளித்தார். தொடர்ந்து பேசிய அவர் கரூரில் சமூக வலைதளங்களில் எங்களை பற்றி தகாத வார்த்தைகள் வருகிறது. இனாம் கரூரில் 900 ஏக்கர் உள்ளது. 1967ல் இனாம் ஒழிப்பு சட்டம் மூலம் அரசு மக்களுக்கு பட்டா கொடுத்தனர். ஆனால், தற்போது பூஜ்ஜிய மதிப்பு கொண்டு வருகின்றனர். மக்கள் பாதிக்கப்படக்கூடாது. கோவில் நில பிரச்சனைக்கு உரிய தீர்வு வரவில்லை என்றால், சொந்த மண்ணில் மக்கள் அகதிகளாக மாறுவார்கள்.எனவே தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.