கண்ணாடி கடையின் பூட்டை உடைத்து ரூபாய் 45 ஆயிரம் திருட்டு
கல்லாப்பெட்டியில் வைத்திருந்த ரூபாய் 45 ஆயிரம் ரொக்க பணம் திருட்டு;
திருச்சி காஜா பேட்டை புதுத் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சையது முகமது (வயது 40). திருச்சி - மதுரை சாலையில் கண்ணாடி கடை வைத்து நடத்தி வருகிறார். வழக்கம் போல் இரவு கடைய கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். பின்னர் மறுநாள் கடை திறக்க சென்றபோது ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது கல்லாப்பெட்டியில் வைத்திருந்த ரூபாய் 45 ஆயிரம் ரொக்க பணம் திருட்டு போயிருந்தது தெரியவந்தது .இது குறித்து சையது முகமது கோட்டை போலீசில் புகார் செய்தார் .அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜராஜேஸ்வரி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.