ரூ 45 லட்சத்தில் புதிய துணை சுகாதார மையம் கட்டும் பணிக்கு பூமிபூஜை நடைபெற்றது,

ரூ 45 லட்சத்தில் புதிய துணை சுகாதார மையம் கட்டும் பணிக்கு பூமிபூஜை நடைபெற்றது,;

Update: 2025-06-27 12:01 GMT
ரூ 45 லட்சத்தில் புதிய துணை சுகாதார மையம் கட்டும் பணிக்கு பூமிபூஜை நடைபெற்றது, கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மணவாடி குக்கிராமத்தில் 2025 - 26 ஆண்டுக்கான 15வது சுகாதார நிதி குழு மானியத்தில் ரூபாய் 45 லட்சம் மதிப்பீட்டில் புதிய துணை சுகாதார மையம் கட்டும் பணிக்கான பூமி பூஜை எம்எல்ஏ சிவகாமசுந்தரி தலைமையில் நடைபெற்றது. பூமி பூஜையில் பங்கேற்று அதற்கான பணிகளை எம்எல்ஏ சிவகாமசுந்தரி துவக்கி . இந்த நிகழ்வில் தாந்தோணி கிழக்கு ஒன்றிய செயலாளர் ரகுநாதன் , மணவாடி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கந்தசாமி , வட்டார வளர்ச்சி அலுவலர்,செவிலியர்கள் , ஊர் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு பூமி பூஜை விழாவை சிறப்பித்தனர்.

Similar News