வேப்பனப்பள்ளி அருகே ரூ.45 லட்சம் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா.

வேப்பனப்பள்ளி அருகே ரூ.45 லட்சம் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா.;

Update: 2025-09-11 02:21 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள குருவரெட்டி போடூர் கிராமத்தில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10.40 லட்சம் மதிப்பீட்டில் புதிய பல்நோக்கு கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழாவும், தொடர்ந்து பில்லனகுப்பம் கிராமத்தில் பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் சி.எப்.எஸ்.ஐ.டி.எஸ். நிதியில் இருந்து ரூ.34.23 லட்சம் மதிப்பில் புதிய வகுப்பறை கட்ட பணிகளை கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். அதிமுகா நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News