கரூர், வெண்ணைமலை கோவில் நில பிரச்சனை-அறநிலையத்துறை அதிகாரிகள் 450-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் உதவியுடன் வீடு மற்றும் கடைகளுக்கு சீல் வைக்கும் பணியை தொடங்கினர்.

கரூர், வெண்ணைமலை கோவில் நில பிரச்சனை-அறநிலையத்துறை அதிகாரிகள் 450-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் உதவியுடன் வீடு மற்றும் கடைகளுக்கு சீல் வைக்கும் பணியை தொடங்கினர்.;

Update: 2025-11-27 12:43 GMT
கரூர், வெண்ணைமலை கோவில் நில பிரச்சனை-அறநிலையத்துறை அதிகாரிகள் 450-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் உதவியுடன் வீடு மற்றும் கடைகளுக்கு சீல் வைக்கும் பணியை தொடங்கினர். கரூர், வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் அமைந்துள்ளன. அப்பகுதியில் பொதுமக்கள் வசிக்கக்கூடிய வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ள நிலங்கள் கோவிலுக்கு சொந்தமானது என சேலத்தைச் சேர்ந்த திருத்தொண்டர் அறக்கட்டளை அறங்காவலர் ராதாகிருஷ்ணன் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் அறநிலையத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என மீண்டும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார். இதனையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில் வெண்ணைமலை பகுதியில் அமைந்துள்ள வீடுகள் மற்றும் கடைகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கையில் அறநிலையத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அப்பகுதியில் வசிக்கக்கூடிய பொதுமக்கள் தங்களுக்கு தானமாக வழங்கப்பட்ட இனாம் நிலங்கள் எனக் கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் வெண்ணைமலை கடைவீதியில் அமைந்துள்ள வீடு மற்றும் 30-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல் வைப்பதற்கு அறநிலையத்துறை அதிகாரிகள் இன்று பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் முன்பாக குவிந்தனர். இதற்கு கரூர் மாவட்ட எஸ்.பி ஜோஸ் தங்கையா தலைமையில், பாதுகாப்பு பணிக்காக கோவில் முன்பு கரூர் மட்டுமின்றி திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 450க்கும் மேற்பட்ட போலீசார் வரவழைக்கப்பட்டனர். தொடர்ந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் கணேஷ் முருகன் தலைமையில் காவல்துறையினர் மற்றும் அரசு அதிகாரிகள் காலை முதல் பொதுமக்கள் மற்றும் கரூர் எம்பி ஜோதிமணி அதிமுக முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் உள்ளிட்டவர்களிடம் பல கட்ட பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். தற்போது காவல்துறை பாதுகாப்புடன் அறநிலை துறை அதிகாரிகள் வீடு மற்றும் கடைகளுக்கு சீல் வைக்கும் பணியை தொடங்கியுள்ளனர். தற்போது வரை ஒரு வீடு நான்கு கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் சீல் வைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதியில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Similar News