ஒரத்துப்பாளையம் அணைக்கட்டு பகுதியில் 4500 மரக்கன்றுகள் நடும் விழா கோலகாலமாகக் கொண்டாடிய தனியார் அமைப்பினர்
காங்கேயம் அருகே ஒரத்துப்பாளையம் அணைக்கட்டு பகுதியில் 4500 மரக்கன்றுகள் நடும் விழா - 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்;
திருப்பூர் மாவட்டம் வனத்துக்குள் திருப்பூர் மற்றும் துளிகள் காங்கேயம் இணைந்து ஒரத்துப்பாளையம் அணைக்கட்டின் கரை பகுதியில் 110 வகையிலான பூ, கனி காய்க்கும் சுமார் 4500 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. மரபு சார்ந்த நாட்டு மரங்கள், அரிய வகை மரங்கள், பறவைகளை ஈர்க்கும் பழ மரங்கள், தேன் பூச்சி மற்றும் பட்டாம் பூச்சிகளை ஈர்க்கும் பூ மரங்கள் நடப்பட்டது. காங்கேயம் அருகே நொய்யல் ஒரத்துப்பாளையம் அல்லது ஒரத்துப்பாளையம் அணை உள்ளது. நொய்யல் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையாகும். இந்த அணையானது 1992 ம் ஆண்டில் திறக்கப்பட்டது. இதன் பாசனப்பரப்பு 10,000 ஏக்கருக்கு மேற்பட்டதாகும். இந்த அணையானது 1045 ஏக்கர் பரப்பளவு கொண்டது ஆகும். அணையின் நீர்பிடிப்பு பகுதி போக மீதமுள்ள 45 ஏக்கர் பரப்பளவில் சீமை கருவேல மரங்கள் பரவி இருந்தது. அந்த சீமை கருவேல மரங்களை கடந்த 3 மாதங்களாக ஜே.சி.பி இயந்திரம் கொண்டு அப்புறப்படுத்தி, மேடு பள்ளங்களான பகுதிகளை சமன் செய்யப்பட்டது. ஒவ்வொரு 2 ஏக்கர் பகுதிகளில் மழை நீர் தேக்கி வைக்க குட்டைகள் அமைக்கப்பட்டது. மேலும் இந்த பகுதியில் பராமரிப்பு இல்லாமலும் பயன்படுத்த முடியாமல் இருந்த கிணறுகளை சுத்தம் செய்தும் சூரிய மின் சக்தி (சோளர் முறையில் ) கொண்டு அதிலிருந்து தண்ணீர் ஆனது நடப்படும் மரங்களுக்கு நீர் பாய்ச்சும் விதமாக திட்டங்கள் தீட்டப்பட்டது. சுமார் 110 வகையான மரபு சார்ந்த நாட்டு மரங்கள், அரிய வகை மரங்கள், பறவைகளை ஈர்க்கும் பழ மரங்கள், தேன் பூச்சி மற்றும் பட்டாம் பூச்சிகளை ஈர்க்கும் பூ மரங்கள் உட்பட 4500 மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி இன்று துவங்கியது. சுமார் 6 அடி முதல் 8 அடி உயரம் கொண்ட 3 வருடங்களாக மரக்கன்றுகள் கர்நாடக மாநில ராஜமுந்திரி பகுதியில் இருந்து வாங்கி வரப்பட்ட நடவு செய்யப்பட்டது. மேலும் இங்கு நடப்படும் மரங்களை கால்நடைகளால் பாதிக்காத அளவு சுற்றிலும் கம்பி வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது இதற்குண்டான பணிகளை மனதுக்குள் திருப்பூர் துளிகள் காங்கேயம் நிழல்கள் வெள்ளகோவில் போன்ற அமைப்பைச் சார்ந்த தன்னார்வலர்கள் சிறப்பாக செய்து இருந்தனர். மேலும் இந்த மரம் நடு விழாவில் காங்கேயம் ஊராட்சி குழு தலைவர் மகேஷ் குமார் வெற்றி அமைப்பின் தலைவரும் கிளாசிக் போலோ சிவராமன், தம்மரெட்டிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பாலசுப்பிரமணி, மறவபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் கீதாமணி சிவகுமார், துணைத் தலைவர் மஞ்சு சுப்பிரமணியம், காங்கேயம் டவுன் ரோட்டரி நிர்வாகிகள், அறிவுத்திருக்கோவில் நிர்வாகிகள், காங்கேயம் ரன்னர்ஸ் அமைப்பினர், தமிழர் பாரம்பரிய கலை மன்ற நிர்வாகிகள், விவசாய சங்கத்தினர், தொழிலதிபர்கள், சமூக ஆர்வலர்கள், உள்ளார் இளைஞர்கள், மற்றும் ஒரத்துப்பாளையம் அதன் சுற்றுவட்டார பொதுமக்கள் உட்பட 250 மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பல்வேறு பகுதிகளில் மண், மரம்,காடுகள்,மலைகள் ஆகியவற்றை சமூக விரோதிகளால் அளிக்கப்படுவதாகவும் மேலும் நகரமயமாதலால் மற்றும் சாலை விரிவாக்க பணிகளுக்கு மரங்கள் வெட்டப்படுவது ஒரு புறம் நடைபெற்று கொண்டிருக்கும் வேளையில் தனியார் அமைப்புகள் அதில் உறுப்பினர்களாக உள்ள இளைஞர்கள்,பெண்கள் மற்றும் குழந்தைகள் மரம் நடுவதில் காட்டும் ஆர்வம் இயற்கையை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.