கரூர் மாவட்டத்தில் 45.80 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் சற்று முன் அறிவிப்பு.
கரூர் மாவட்டத்தில் 45.80 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் சற்று முன் அறிவிப்பு.
கரூர் மாவட்டத்தில் 45.80 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் சற்று முன் அறிவிப்பு. தென்மேற்கு வங்க கடலில் கடந்த சில நாட்களாக வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் தொடர்ச்சியாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. நேற்று மாலை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கன மழை பெய்யும் எனவும், மற்ற மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவிப்பு செய்தது. இதன் அடிப்படையில் நேற்று கரூர் மாவட்டத்தில் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், நள்ளிரவில் குறிப்பிட்ட சில பகுதிகளில் மழை பெய்துள்ளது. மழை நிலவரம் குறித்து மாவட்ட நிர்வாகம் சற்று முன் அறிவிப்பு செய்துள்ளது. அதன் அடிப்படையில் கரூரில் அதிகபட்சமாக 24.80 மில்லி மீட்டரும் அணைப்பாளையத்தில் 14.20 மில்லி மீட்டரும், க.பரமத்தியில் 4.20 மில்லி மீட்டரும், கிருஷ்ணராயபுரத்தில் 1.60 மில்லி மீட்டரும், மாயனூரில் 1.00 மில்லி மீட்டர் என மாவட்டத்தில் 45.80 மில்லி மீட்டர் எனவும், மாவட்டத்தில் சராசரியாக 3.82 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.