பிளாஸ்டிக், காகித அட்டைகளை சாப்பிடும் கால்நடைகள்
பிளாஸ்டிக், காகித அட்டைகளை சாப்பிடும் கால்நடைகள்
பிளாஸ்டிக், காகித அட்டைகளை சாப்பிடும் கால்நடைகள் ஆசனூர் மலைப்பகுதியில் வசிக்கும் மலை கிராம மக்கள் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இங்குள்ள கால் நடை வளர்ப்போர் மாடுகளை மேய்ச்சலுக்காக வனப்பகுதியில் அழைத்து சென்று விடுவர். காலை முதல் மேய்ச்சலில் ஈடுபடும் மாடுகள் மாலையில் தங்களது இருப்பிடத்திற்கு திரும்பி விடும். இயற்கையான மூலிகை செடிகள் பசுந்தழைகளை சாப்பிடும் மாடுகளுக்கு மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் சுற்றுலா பயணிகள் பொரித்த முறுக்கு மிக்ஸர், மசாலா உணவு தின்பண்டங்களின் பாலித்தீன் பைகள் மற்றும் அட்டை பெட்டிகளை வீசி விட்டு செல்வதால் மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் பிளாஸ்டிக் காகிதங்கள் மற்றும் காகித அட்டை பெட்டிகளை தனியார் உணவகம் அருகில் காகித அட்டைகளை சாப்பிடும் பசு மாடு.உணவாக உட்கொண்டு பழகிவிட்டன.இதற்கிடையே ஆசனூர் மலைப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலை பேருந்து நிறுத்தம் அருகே வனச்சாலையோரம் மேய்ச்சலில் ஈடுபடும் மாடுகள் ஆசனூர் சாலையோரத்தில் கிடக்கும் காகித அட்டை, பிளாஷ்டிக் கழிவுகளை சாப்பிடுவது வாடிக்கையாகி விட்டது. இதனால், மாடுகளுக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டு உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது மேலும், மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பிளாஷ்டிக் பாட்டில்கள்,காகித அட்டைகளை வீசுவதை வனத்துறையி னர் கண்டறிந்து அபரா தம் விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்