புதிய திராவிட கழக நிறுவனத் தலைவர் பிறந்தநாள் விழா
பள்ளிபாளையம் ஆனந்த மலர் குழந்தைகள் காப்பகத்தில், புதிய திராவிட கழகம் நிறுவனத் தலைவர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.;
புதிய திராவிட கழகம் நிறுவன தலைவர் கே.எஸ்..ராஜ்கவுண்டர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு நாமக்கல் மேற்கு மாவட்டம் பள்ளிபாளையம் ஒன்றியம் மாவட்ட செயலாளர் காடையர் சரவணன் தலைமையில்,பள்ளிபாளையம் திருச்செங்கோடு சாலை கோயிலாங்காடு பகுதியில் செயல்படும், ஆனந்த மலர் குழந்தைகள் காப்பகத்தில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு காலை உணவு மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டது..இந்த நிகழ்வில் பள்ளிபாளையம் ஒன்றிய செயலாளர் Gp.கௌதம், நகர செயலாளர் வேலுச்சாமி மற்றும் புதிய திராவிட கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.