கீரனூர் கல்லுக்குமியல்பட்டியைச் சேர்ந்தவர் ஜோசப் இமானுவேல். இவர் தனது இரு சக்கர வாகனத்தில் கீரனூர் வந்துவிட்டு குளத்தூர் புறவழி சாலை வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த சரக்குவேன் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்தவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துள்ளார். கீரனூர் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.