திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகின்றது. அந்த வகையில் நேற்று பல்வேறு பகுதிகளில் கனத்த மழை பெய்தது. இந்த நிலையில் அதிகபட்சமாக நாலுமுக்கு பகுதியில் 82 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. அடுத்தபடியாக ஊத்து பகுதியில் 80 மில்லி மீட்டரும், காக்காச்சி பகுதியில் 72 மில்லி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது.