அரசு பேருந்தில் கொண்டு சென்ற 47 கிலோ குட்கா பறிமுதல்
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்தில் கொண்டு சென்ற 47 கிலோ குட்கா பறிமுதல்;
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி உத்தரவின் பேரில் சிறப்பு சார்பு ஆய்வாளர் மகாராஜன், மகேஸ்வரன் மற்றும் தலைமை காவலர் அன்வர், மணிகண்டன் அவர்கள் வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெங்களூரில் இருந்து மதுரைக்கு அரசு பேருந்தில் மூன்று மூடை தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் இருந்ததை பறிமுதல் செய்தனர். திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை பசும்பொன் நகர் பகுதியைச் சேர்ந்த இசக்கி என்பவரது மகன் ஆறுமுகம் வயது 25 என்பவர் பெங்களூரில் இருந்து சுமார் 47 கிலோ மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கொண்டு சென்றது தெரியவந்தது. அவரிடமிருந்து புகையிலை பொருட்களை கைப்பற்றி உணவு பாதுகாப்பு அலுவலகத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரி கலைவாணி மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர் முருகன் ஜோதிமணி செல்வம் ஆகியோர் இடத்தில் ஒப்படைத்தனர். உணவு பாதுகாப்பு அலுவலர்கள் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கடத்திய ஆறுமுகம் என்பவருக்கு ரூபாய் 50,000 அபராதம் விதித்தனர். மேலும் இதே போல் திண்டுக்கல் வட்டார பகுதிகளில் 8 சில்லரை விற்பனையாளர்களிடம் சுமார் 15 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்து அவர்களுக்கு தலா ₹25,000 வீதம் 2 லட்சம் அபராதம் விகித்தனர். தொடர்ந்து இதே போல் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.