நாமக்கல் டிரினிடி மகளிர் கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்.
நாமக்கல் டிரினிடி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 'டிரினிடி மகளிர் மன்றம் ' சார்பில் ஓணம் பண்டிகை கல்லூரி வளாகத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.;
By : NAMAKKAL KING 24X7 B
Update: 2025-09-04 13:18 GMT
நிகழ்ச்சிக்கு கல்லூரியின் செயல் இயக்குநர் அருணா செல்வராஜ் தலைமை தாங்கி ஓணம் பண்டிகையின் சிறப்புகளை எடுத்துரைத்தார். முதல்வர் எம். ஆர். லட்சுமிநாராயணன் முன்னிலை வகித்தார்.ஓணம் பண்டிகையினை ஒட்டி மாணவியர் மற்றும் பேராசிரியைகள் கேரள பாரம்பரிய வெண்பட்டு சேலையில் வருகை புரிந்தனர். மாணவிகள் ஓணம் திருவிழா நடனமாடி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தனர். கல்லூரி வளாகம் பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில் நிர்வாக அலுவலர் என். எஸ். செந்தில்குமார், துறைத் தலைவர்கள் ஆர். நவமணி, என். இளமதி, டி. கே. அனுராதா, ஜி. கண்ணகி, எம். சசிகலா, பி. லேனா, பி. லட்சுமி, வீ. இந்திரகுமாரி, ஏ.பி. பவித்ரா, பி. ஶ்ரீ ரேணுகாதேவி , உடற் கல்வி இயக்குநர் வீ. அர்ச்சனா, நூலகர் எம். செல்வி உட்பட பேராசிரியப்பெருமக்கள் & மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மாணவர் பேரவைத் தலைவர் டி. பிரதிக்ஷா, துணைத்தலைவர். ஏ. சாலினி, செயலர் கே. ஹெவியா, இணைச் செயலர் ஆர். கவிப்பிரியா, நுண்கலை செயலர் ஆர். மதுசூதனா, நுண்கலை இணைச் செயலர் கே. நிவேதா ஆகியோர் பேசினர்.