மூதாட்டியை மிரட்டும் இராசிபுரம் திமுக கவுன்சிலர் நடவடிக்கை எடுக்குமா காவல்துறை?
வீட்டின் பொது சுவரை இடித்து தள்ளிய இராசிபுரம் 23 - வது வார்டு திமுக கவுன்சிலர்...கட்டி தராமல் இழுத்தடித்து கொலை மிரட்டல் விடுப்பதாக மூதாட்டி ஒருவர் பேரன் பேத்தியுடன் SP அலுவலகத்தில் புகார்.;
By : NAMAKKAL KING 24X7 B
Update: 2025-09-10 13:14 GMT
எங்க வேணாலும் போய் சொல்லு கவலை இல்லை... திமுக கவுன்சிலர் மிரட்டலால் உயிர் பாதுகாப்பு கேட்கும் அவலம்.தொடர்ந்து 3-வது முறையாக மாவட்ட காவல் கண்காணிபாளரிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என கதறல் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் 23 - வது வார்டு நாராயணன் தெரு பகுதியில் வசிப்பவர் நாகம்மாள்(70) தனது இரு மகன்கள் இறந்த நிலையில், வாழ்வாதாம் இல்லாமல் தனது பேரன் மற்றும் பேத்தி புடன் தனியாக வசித்து வருகிறார்.இந்நிலையில், நாகம்மாள் வசித்து வரும் குடியிருப்புக்கும் 23 ஆவது திமுக கவுன்சிலர் குடியிருப்புக்கும் இடையே .பொது சுவர் இருப்பதால் அவர் வீடு கட்டுவதற்கு இந்த பொது சுவரை இடித்து பின்னர் புதிய சுவரை கட்டி தருகிறேன் என வாக்குறுதி கொடுத்தார். ஆனால்,சுவரை கட்டி தராததால் இராசிபுரம் நாகம்மாள் காவல் நிலையம் மற்றும் ஆட்சியரிடம் மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை என வேதனையுடன் தெரிவித்தார் தொடர்ந்து, திமுக கவுன்சிலர் செல்வம்(எ)நாகேஸ்வரன் நீ எங்க வேணா போய் சொல்லு எனக்கு கவலை இல்லை எனவும், ராசிபுரம் காவல் நிலையத்தில் கட்ட பஞ்சாயத்து பேசி உன்னுடைய சுவர் இடிக்கவே இல்லை என கூறி கவுன்சிலருக்கு ஆதரவாக செயல்பட்டதாக குற்ற சாட்டை கூறுகின்றனர்.. தொடர்ந்து மழை காலமாக இருப்பதால் சுவர் இடிக்கப்பட்டதால் மழை நீர் ஆனது உள்பகுதியில் மழை நீர் சூழ்ந்து பள்ளி படிக்கும் குழந்தைகள் சிரமப்படுவதாக கூறினார். இது சம்பந்தமாக மூன்றாவது முறையாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு மனு அளித்தும் திமுக கவுன்சிலர் என்பதால் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்காமல் காவல்துறையினர் மெத்தனம் காட்டுவதாக குற்றச்சாட்டு