உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய எம்.பி வி.எஸ் மாதேஸ்வரன்.
நாமக்கல் மோகனூர் ஒன்றியம், வளையப்பட்டி சமுதாய கூட்டத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சியில் நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் VS.மாதேஸ்வரன் MP கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும், பணி ஆணைகளையும் வழங்கினார்.;
By : NAMAKKAL KING 24X7 B
Update: 2025-09-11 13:45 GMT
இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஒருங்கிணைந்த நாமக்கல் மாவட்ட விவசாய அணி செயலாளரும் திசா கமிட்டி உறுப்பினருமான ரவிச்சந்திரன், பொருளாளர் சசிகுமார்,நாமக்கல் தெற்கு மாவட்ட வர்த்தக அணி செயலாளர் BSNL ஆலோசனைக் குழு உறுப்பினர் ஒருங்கிணைந்த நாமக்கல் மாவட்ட தீரன் தொழிற்சங்க செயலாளர் குரு இளங்கோ, மோகனூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவகுமார் உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய கிளை நிர்வாகிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.