டி.எஸ்.பி, மற்றும் இன்ஸ்பெக்டர்களை கைது செய்ய வேண்டும். எஸ்.பி அலுவலகத்தில் புகார் மனு அளித்த விவசாயி.

தோட்டத்தில் கள் இறக்க வைத்திருந்த கலயத்தை சேதப்படுத்திய டி.எஸ்.பி, இன்ஸ்பெக்டர்களை கைது செய்ய வேண்டும்.விவசாயிகள் சங்க தலைவர் நாமக்கல் எஸ்.பி அலுவலகத்தில் புகார் மனு அளித்ததால் பரபரப்பு;

Update: 2025-09-12 14:29 GMT
உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் வேலுசாமி நாமக்கல் எஸ்.பி அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளித்தார் அந்த மனுவில் பனை மற்றும் தென்னை மரத்தில் இருந்து கள் இறக்க அனுமதிக்ககோரியும், கள்ளுக்கு உண்டான தடையை தமிழக அரசு நீக்ககோரி கடந்த செப்டம்பர்  9 ம் தேதி நாமக்கல் அருகே கோனூரில் அமைந்துள்ள தனது சொந்த தோட்டத்தில் தென்னை மரத்தில் கள் இறக்கி சந்தைப்படுத்தும் போராட்டத்தில் ஈடுப்பட்டோம், போராட்டத்திற்கு முந்தைய நாளான செப்டம்பர் 8 ம் தேதி தோட்டத்தில் உள்ள தென்னை மரத்தில் கள் இறக்க வைத்திருந்த சுமார் 50 க்கும் மேற்பட்ட கலசத்தை பரமத்தி வேலூர் டி.எஸ்.பி தலைமையில் பரமத்தி காவல் ஆய்வாளர், திருச்செங்கோடு மதுவிலக்கு பிரிவு ஆய்வாளர் ஆகியோர் எந்தவிதமான அறிவிப்புகளையும் தெரிவிக்காமல் உடைத்து சேதப்படுத்தி விட்டனர் மேலும் தென்னை மரத்தில் உள்ள மட்டை, பாலைகளை சேதப்படுத்தியதால் சுமார் 5 இலட்சம் வரை இழப்பீடு ஏற்பட்டன எனவே முறையான எந்த ஒரு அறிவிப்பும் வழங்காமல் தென்னை தோப்பில் கலசங்களை சேதப்படுத்திய பரமத்தி வேலூர் டிஎஸ்பி, பரமத்தி காவல் ஆய்வாளர், திருச்செங்கோடு மதுவிலக்கு பிரிவு ஆய்வாளர் ஆகியோரை கைது செய்ய வேண்டும் என அந்த புகார் மனுவில் தெரிவித்திருந்தார்.

Similar News