அரியலூரில் செந்தொண்டர் பயிற்சி வகுப்பு. 48 பேர் பங்கேற்பு.
அரியலூர் வாலாஜாநகரத்தில் நடைபெற்ற செந்தொண்டர் பயிற்சி வகுப்பில் 48 பேர் பங்கேற்றனர்..;
அரியலூர், பிப்.23 - அரியலூர் வாலாஜாநகரம் சமுதாயக் கூடத்தில் செந்தொண்டர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது வகுப்பிற்கு DYFl மாவட்ட தலைவர் ஆர் ரவீந்திரன் தலைமை வகித்தார். பயிற்சி வகுப்பை அரியலூர் ஒன்றிய செயலாளர் அருண்பாண்டியன் துவக்கி வைத்தார் இதில் செந்தொண்டர் சம்பந்தமாக மாநில பொறுப்பாளர் ஜி.ஸ்டாலின் கலந்து கொண்டு முக்கியத்துவம் சம்பந்தமாக விளக்கிப் பேசினார் இதில் மாணவர் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்..பி.சரோஜினி மற்றும் சிபிஎம் அரியலூர் மாவட்ட செயலாளர் எம்.இளங்கோவன், செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மணிவேல், எம் வெங்கடாசலம், பி.துரைசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். எதிர்வரும் 2.3. 2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு ஜெயங்கொண்டம் அரசுமேல்நிலைப் பள்ளி விளையாட்டு திடலில் பேரடு நடை பயிற்சி அளிப்பது எனவும் இதில் 100 பேர் செந்தொண்டர் பங்கேற்க வைப்பது எனவும் .முடிவு செய்யப்பட்டுள்ளது. நடந்த பயிற்சி வகுப்பில் ஜெயங்கொண்டத்திலிருந்து 20 பேரும், தா.பழூரிலிருந்து 4 பேரும், ஆண்டிமடத்திலிருந்து 4 பேரும், செந்துறையிலிருந்து 12 பேரும், திருமானூரிலிருந்து 5 பேரும், அரியலூரிலிருந்து 3 பேர் என மொத்தம் 48 பேர் கலந்து கொண்டனர்.