கள்ளச்சாராயம் சாவில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அ.தி.மு.க., ரூ.5 ஆயிரம் வழங்கல்

வழங்கல்

Update: 2024-08-23 03:36 GMT
கள்ளச்சாராயம் பாதிப்பில் பெற்றோரை இழந்த இரு குடும்பத்தின் பிள்ளைகளுக்கு அ.தி.மு.க., சார்பில் மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் கல்வி உதவித் தொகை வழங்கி நேற்று துவக்கி வைக்கப்பட்டது.கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டு பலர் இறந்தனர். இதில் பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கு 10 ஆண்டுகள் கல்வி உதவித் தொகையாக மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என்று அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி அறிவித்தார்.அதன்படி சுரேஷ் - வடிவுக்கரசி பிள்ளைகள் கோகிலா,16; ஹரிஷ்,15; ராகவன்,14; மற்றும் பாட்டியின் பராமரிப்பில் உள்ள பிரவீன் என்பவரது பிள்ளைகள் ஜோஸ்வா,5; மோசஸ்,4; ஆகியோருக்கு நேற்று காசோலை வழங்கி துவக்கி வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில், அ.தி.மு.க, மாவட்ட செயலாளர் குமாரகுரு பங்கேற்று தலா ரூ.5 ஆயிரத்திற்கான காசோலையை வழங்கி, இனி வரும் மாதங்களில் வங்கி கணக்கிற்கு நேரடியாக பணம் செலுத்தப்படும் என்றும் தெரிவித்தார். இதில் செந்தில்குமார் எம்.எல்.ஏ., நகர செயலாளர் பாபு, வழக்கறிஞரணி செயலாளர் சீனுவாசன், எம்.ஜி.ஆர்.,மன்ற செயலாளர் தங்கபாண்டியன், பாசறை செயலாளர் வினோத், நகர கவுன்சிலர்கள் முருகன், சத்யா குட்டி, முன்னாள் ஒன்றிய துணை சேர்மன் கண்ணன், முன்னாள் நகர பொருளாளர் சுரேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.

Similar News