ஆண்டிபட்டி அருகே அகில இந்திய சட்ட உரிமை கழக 5 வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு அன்னதானம்

தேனி மாவட்டசெயலாளா் ஜெயக்குமாா் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக நிறுவனத்தலைவா் வழக்கறிஞா் ,டாக்டர். ராஜகுமார பாண்டியன் கலந்து கொண்டு அன்னதானத்தை துவக்கி வைத்தார்;

Update: 2025-03-08 16:34 GMT
ஆண்டிபட்டி அருகே அகில இந்திய சட்ட உரிமை கழக 5 வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு அன்னதானம் . தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே, அகில இந்திய சட்டஉாிமை கழக 5ம் ஆண்டு துவக்கவிழாவினை முன்னிட்டு, 2000 ஏழை எளிய மக்களுக்கு ,தேனி அரசு மருத்துவமனை முன்பாக அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு தேனி மாவட்டசெயலாளா் ஜெயக்குமாா் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக நிறுவனத்தலைவா் வழக்கறிஞா் ,டாக்டர். ராஜகுமார பாண்டியன் கலந்து கொண்டு அன்னதானத்தை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் மருத்துவமனை வரும் நோயாளிகள், பார்வையாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் அன்னதானத்தில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பொது செயலாளா் வழக்கறிஞா் பிரசன்னபிரபு, மாநில செயற்குழு உறுப்பினா்கள் சசிக்குமாா்,காா்த்திக் மற்றும் கழக மாநில ,மாவட்ட ,ஒன்றிய ,நகர நிா்வாகிகள், தோழமை கட்சி மற்றும் அமைப்பினர் கலந்து கொண்டனர்.

Similar News