வேலூர்: 5 லிட்டர் சாராயம் பறிமுதல்!
வேலூரில் 5 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.;
வேலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் ஜார்தான்கொல்லை பகுதிகளில் சாராய விற்பனையை தடுக்க ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு வீட்டின் பின்புறம் சாராயம் பதுக்கி வைத்திருந்த சிதம்பரம் (39) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் அவரிடமிருந்து 5 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.