சதித்திட்டம் தீட்டிய 5 வாலிபர்கள் கைது

திண்டுக்கல்லில் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சதித்திட்டம் தீட்டிய 5 வாலிபர்கள் கைது;

Update: 2025-05-18 02:48 GMT
திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி சார்பு ஆய்வாளர் சரத்குமார் மற்றும் காவலர்கள் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது கக்கன்நகர் அருகே கத்தி, உருட்டு கட்டை உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சதி திட்டம் தீட்டிய குள்ளனம்பட்டியை சேர்ந்த முத்துகாமாட்சி(24), கக்கன் நகரை சேர்ந்த சங்கரபாண்டி(21), ஆதிப்பிரியன்(19), கிழக்கு ஆரோக்கியமாதா தெரு பகுதியை சேர்ந்த கிறிஸ்டோபர்(31), YMR-பட்டியை சேர்ந்த செந்தில் (எ) மினி மண்டையன்(32) ஆகிய 5 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து கத்தி, உருட்டு கட்டை உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News