பூட்டை உடைத்து 5 பவுன் தங்க நகை திருட்டு

ஒட்டன்சத்திரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் தங்க நகை திருட்டு;

Update: 2025-06-02 03:00 GMT
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அடுத்த ஸ்ரீராமபுரத்தைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் அப்துல் சலாம் (50). இவா் குடும்பத்துடன் ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்ற சுபநிகழ்வுக்கு வீட்டைப் பூட்டி விட்டுச் சென்றாா். மீண்டும் திரும்பி வந்து பாா்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 5 பவுன் தங்க நகை, ரூ.10 ஆயிரம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

Similar News