கோவை: 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்திய கோவை மாவட்ட ஆட்சியர் !
மதுக்கரை அருகே உள்ள மைலேறிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு நேரில் சென்று, 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுஅறிவு பாடம் நடத்தி, வினாக்களை எழுப்பிய கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், மாணவர்களிடம் ஆங்கிலப் பாடம் வாசிக்கச் செய்து அவர்களின் திறமையை பாராட்டினார்.;
மதுக்கரை அருகே உள்ள மைலேறிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு நேரில் சென்று, 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுஅறிவு பாடம் நடத்தி, வினாக்களை எழுப்பிய கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், மாணவர்களிடம் ஆங்கிலப் பாடம் வாசிக்கச் செய்து அவர்களின் திறமையை பாராட்டினார். மாணவர்கள் உற்சாகமாக பதில் அளித்ததைக் கண்டு ஆட்சியர் பாராட்டைத் தெரிவித்தார். அதேவேளை, பள்ளிகளில் அமைக்கப்பட்ட மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை மாணவர்கள் மூலம் அறிமுகப்படுத்தி, அதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பள்ளி தலைமையாசிரியருக்கு அவர் அறிவுரை வழங்கினார். இது மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சி பணிகள் மற்றும் மாணவர்களின் கல்வித் தர உயர்வுக்கான முயற்சியில் ஒரு முக்கிய கட்டமாக அமைந்துள்ளது.