தஞ்சாவூரில் வீடுபுகுந்து நகை திருடியவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை
சிறை தண்டனை;
தஞ்சாவூரில் வீடுபுகுந்து 7.5 பவுன் தங்கச் சங்கிலியை திருடியவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து தஞ்சாவூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தஞ்சாவூர் ஞானம் அருள்மேரி நகர் 10 ஆவது தெருவைச் சேர்ந்த தனலட்சுமி(65) என்பவர் வீட்டில், கடந்த 21.11.2017 அன்று, வீட்டில் உள்ள அனைவரும் தூங்கி கொண்டிருந்தபோது, வீட்டின் பின்பக்க வழியாக வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்த 7.5 பவுன் தங்க சங்கிலியை, தஞ்சாவூர் சேப்பனாவாரி சிவாஜி நகரைச் சேர்ந்த நடேசன் மகன் அங்கேஷ் (43) என்பவர் திருடிச் சென்றார். இதுகுறித்து தஞ்சாவூர் தாலுகா காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, அங்கேஷை கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு தஞ்சாவூர் இரண்டாம் எண் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பிரபுராம், குற்றம்சாட்டப்பட்ட அங்கேஷூக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.