வரும் 5ம்தேதி மீலாதுன் நபி விழா காஜிகள் கூட்டமைப்பு
தமிழகத்தில் வரும் 5ம்தேதி மீலாதுன் நபி விழா காஜிகள் கூட்டமைப்பு செயலாளர் முஜிபுர் ரகுமான் அறிவிப்பு;
தமிழகத்தில் திருநெல்வேலி, கோவை, உடுமலைப்பேட்டை, திருப்பூர், ஈரோடு, உள்ளிட்ட பகுதிகளில் நேற்று (24-08-2025) ஞாயிற்றுக்கிழமை) ஹிஜ்ரீ 1447 ரபீஉல் அவ்வல் பிறை தென்பட்டதால் 25-08-2025 திங்கட்கிழமை இன்று முதல் ரபீஉல் அவ்வல் பிறை 1 தொடங்குகிறது. வரும் ரபீஉல் அவ்வல் பிறை 1 முதல் 12 வரை மவ்லிது ஷரீஃப் ஓதி "05-09-2025 வெள்ளிக்கிழமை அன்று (1,500-வது) மீலாதுன் நபி அனுசரிக்கப்படும்" என காஜிகள் கூட்டமைப்பு செயலாளர் முஜீபுர் ரஹ்மான் அறிவித்தார்.