அவனியாபுரத்தில் 5 ஆயிரம் பேருக்கு அன்னதானம்
மதுரை அவனியாபுரத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு 5000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.;
மதுரை அவனியாபுரம் பகுதியில் பெரிய விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சதுர்த்தி விழாவினை முன்னிட்டு பூஜைகள் ஆராதனைகள் நடைபெற்றன. அதனடிப்படையில் மெகா விநாயகர் சிலை வைக்கப்பட்ட கணக்குபிள்ளை தெருவில் 5 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.