பாகலூர் அருகே பணம் வைத்து சீட்டாட்டம் ஆடிய 5 பேர் கைது.
பாகலூர் அருகே பணம் வைத்து சீட்டாட்டம் ஆடிய 5 பேர் கைது.;
கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் போலீசாருக்கு கனகொண்டப்பள்ளி பகுதியில் பணம் வைத்து சீட்டாட்டம் ஆடிடுவதாக வந்த தகவலின் பேரில் போலீசார் அந்த பகுதியில் பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் பணம் வைத்து சீட்டாட்டம் ஆடிக்கொண்டிருந்த கல்யாண்குமார் (30) பைரோஸ் (30) சிவராஜ் (33) சுதாகர் (35) லட்சுமிபதி (26) ஆகிய ஐந்து பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 3 ஆயிரம் ரூபாய்பணம் மற்றும் ஒரு கார், டூவீலர் ஆகியவை பறிமுதல் செய்தனர்.