போத்தீஸ் சொர்ண மஹால் நகைக் கடையில் 5-வது நாளாக வருமான வரித்துறை சோதனை !

போத்தீஸ் நிறுவனங்களில் ஆவணங்கள் கைப்பற்றப்பட்ட நிலையில், 2 குழுக்களாக அதிகாரிகள் விசாரணை.;

Update: 2025-09-17 08:42 GMT
தமிழகத்தில் உள்ள போத்தீஸ் ஜவுளி, நகைக் கடைகள் மற்றும் நிறுவனங்களில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கோவையில் காந்திபுரம், ஒப்பணக்கார வீதியில் உள்ள இரண்டு ஜவுளி கடைகளில் நான்கு நாட்கள் நடந்த சோதனை நிறைவடைந்த நிலையில், சொர்ண மஹால் நகைக் கடையில் ஐந்தாவது நாளாக நேற்று சோதனை தொடர்ந்து நடைபெற்றது. அதிகாரிகள் முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதுடன், இரண்டு குழுக்களாகப் பிரிந்து ஆவணங்களை ஸ்கேன் செய்தும், விசாரணை மேற்கொண்டும் வருகின்றனர்.

Similar News