சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு - மத்திய அரசு மீது முதல்வர் ஸ்டாலின் சரமாரி தாக்கு

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும் என்று மத்திய அரசை முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.;

Update: 2025-04-07 17:23 GMT
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு - மத்திய அரசு மீது முதல்வர் ஸ்டாலின் சரமாரி தாக்கு
  • whatsapp icon
இது குறித்து அவர் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், “நாட்டு மக்களின் வீடுகளில் அடுப்பு எரிய வேண்டுமா? அல்லது அவர்களது வயிறு எரிய வேண்டுமா? உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யாமல் இருந்தாலே போதும் என்பது சேடிஸ்ட் பாஜக அரசுக்கு மிகவும் பொருந்தும். உலகளவில் கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ள நிலையில், பொட்ரோல், டீசல் விலையைக் குறைக்காவிட்டாலும், பரவாயில்லை, விலையை ஏற்றாதீர்கள் என கேஞ்சும் பரிதாப நிலைக்கு நாட்டு மக்களை தள்ளிவிட்டார்களே? வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு அமைந்துள்ளது. மக்களே, அடவடியாக விலையை உயர்த்திவிட்டு, தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதில் சிறு பகுதியைக் குறைத்து நாடகம் ஆடுவது பாஜகவின் வழக்கமாகிவிட்டது. அந்த நாடகத்தைப் பார்த்துப் பார்த்து நமக்கும் பழக்கமாகிவிட்டது. மத்திய பாஜக அரசே தேர்தல் ஏதாவது வரும் வரை காத்திருக்காமல் இந்த விலை உயர்வை உடனே திரும்பப் பெறுக” என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

Similar News