தஞ்சாவூரில் 50 ஜப்பானியர்கள் சிறப்பு யாகம்

யாகம்;

Update: 2025-07-11 15:51 GMT
உலக நன்மை, மக்கள் நலம்பெற வேண்டி தஞ்சையில் வராகி அம்மனுக்கு 50 ஜப்பானியர்கள் சிறப்பு யாகம் நடத்தினர். தஞ்சை மேலவீதி பங்காரு காமாட்சி மண்டபத்தில் ஜப்பான் நாட்டை சேர்ந்த 50 பேர் சிறப்பு யாகம் நடத்தினர். உலக அமைதிக்காகவும், மக்கள் நலம்பெற வேண்டி வராகி அம்மனுக்கு இந்த சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. பின்னர் அபிஷேக பூஜைகள் செய்தும் வழிபட்டனர். அதைத்தொடர்ந்து அய்யாவாடியில் உள்ள பிரித்தியங்கரா தேவி அம்மன் கோவிலில் சிறப்பு யாகம் மற்றும் அபிஷேக பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர். 50 கோவில்களில் வழிபாடு ஜப்பானில் வசித்து வந்த சிவா ஆதீனம் பாலகும்பகுருமுனி சிவனின் பெருமைகளையும், சிறப்புகளையும் அறிந்து தன் சொத்துகளை துறந்து சிவபக்தனாகி ஆதீனமாக மாறினார். இவர், தென்னாட்டு உடைய சிவனே போற்றி என்ற சித்தர்களின் வாக்கை மனதில் நிறுத்தி இந்தியாவை சேர்ந்த கோபால்பிள்ளை சுப்பிரமணியம் தலைமையில் ஜப்பானியர்களுடன் தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்களுக்கு சென்று சிறப்பு பூஜை, யாகம் செய்து வருகிறார். அதன்படி பழனி, திருச்செந்தூர், திருச்சி, ராமேசுவரம் ஆகிய முக்கிய நகரங்களில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கோவில்களில் ஜப்பானியர்கள் வழிபாடு செய்து வருகின்றனர் . தஞ்சை, அய்யாவாடி ஆகிய இடங்களில் நடந்த சிறப்பு யாகம் மற்றும் அபிஷேக பூஜைகள் ஏற்பாட்டினை சிவபக்தர் கரந்தை குகன் செய்திருந்தார்

Similar News