கோவை மாநகராட்சி அலுவலக முற்றுகை முயற்சி – 50 தூய்மை பணியாளர்கள் கைது

பல்வேறு கோரிக்கையுடன் போராட்டம் – கோவையில் 50 தூய்மை பணியாளர்கள் கைது.;

Update: 2025-08-15 07:41 GMT
கோவை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த மற்றும் தற்காலிக தூய்மை பணியாளர்கள், குறைந்தபட்ச ஊதியம் ரூ.770 வழங்குதல், பணி நேர மாற்றம், நிரந்தர வேலை வழங்குதல், பணியின் போது உயிரிழந்தோரின் வாரிசுகளுக்கு வேலை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். நேற்று காலை கோனியம்மன் கோவில் அருகே கூடிவிட்டு ஊர்வலமாக வந்த பணியாளர்கள், மணிக்கூண்டு அருகே போலீசாரால் தடுக்கப்பட்டனர். இதனால் சாலை மறியலில் ஈடுபட்ட அவர்கள், கைதான பணியாளர்களை விடுதலை செய்யும் கோரிக்கையையும் முன்வைத்தனர். பின்னர், 7 பெண்கள் உட்பட மொத்தம் 50 பேரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

Similar News