கோவை: ரூ.50 லட்சம் கொள்ளை : 100 பவுன் தங்கம் வாங்கித் தருவதாக வஞ்சனை – மதுரை சேர்ந்த 3 பேர் கைது!

100 பவுன் தங்கம் வாங்கித் தருவதாக ரூ.50 லட்சம் மோசடி – கோவை போலீசார் வலை வீசி 3 பேர் கைது.;

Update: 2025-10-21 17:14 GMT
கோவையில், 100 பவுன் பழைய தங்க நகை வாங்கித் தருவதாக கூறி வாலிபரிடம் ரூ.50 லட்சம் மோசடி செய்து தப்பியோடிய ஆறு பேர் கும்பலை போலீசார் வலை வீசி தேடி வந்த நிலையில், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். தேனி மாவட்ட கம்பத்தைச் சேர்ந்த விஜய் மற்றும் பாண்டீஸ்வரன் ஆகியோர் பழைய தங்க நகை விற்பனையில் ஈடுபட்டவர்கள். இவர்களுக்கு மதுரை கருப்பாயூரணியைச் சேர்ந்த தர்மா என்பவருடன் சிறையில் இருந்தபோது பழக்கம் ஏற்பட்டது. சமீபத்தில் தர்மா, கோவையில் 100 பவுன் பழைய தங்கம் கிடைக்கும் என்று கூறி, ரூ.50 லட்சம் கேட்டு விஜயை ஏமாற்றினார். விஜய், பணத்துடன் கோவைக்கு வந்து தர்மா கூறிய இடத்தில் ரூ.50 லட்சம் கொடுத்தபோது, தர்மா மற்றும் அவரது கூட்டாளிகள் தாக்கி பணத்தை பறித்து தப்பினர். பேரூர் காவல் துறை விசாரணையில், மதுரை சக்கிமங்கலத்தைச் சேர்ந்த அழகுபாண்டி, கோபி, முருகன் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளி தர்மா உட்பட மூவர் தேடப்பட்டு வருகின்றனர்.

Similar News