கல்வடங்கும் காவிரி ஆற்றில் 500க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு...
சங்ககிரி:கல்வடங்கும் காவிரி ஆற்றில் 500க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு...
சங்ககிரியை அடுத்த கல்வடங்கம் காவேரி ஆற்றில் 500க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை பக்தர்கள் கரைத்து வழிபட்டனர் ..., நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வந்த நிலையில் சேலம் மாவட்டம் சங்ககிரியை அடுத்துள்ள கல்வடங்கம் காவிரி ஆற்றில் விநாயகர் சதுர்த்தியான நேற்றிலிருந்து இன்று வரை சுமார் 500க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை கொண்டு வந்து சிறப்பு பூஜைகள் செய்து ஆற்றுத்தண்ணீரில் கரைத்தனர். பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளும் வகையில் தேவூர் போலீசார் மற்றும் சங்ககிரி தீயணைப்புத் துறை வீரர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கல்வடங்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார கரையோர பகுதிகளில் அதிக அளவில் பக்தர்கள் விநாயகர் சிலைகளை கரைக்க வந்ததால் அப்பகுதிகளில் விழா கோலமாக காட்சியளித்து வருகிறது.